Bigg Boss Tamil Season 2 | 20th July, 2018 | Episode 34 | Day 33 : checking who is fake in bigg boss house and balaji going to jail


Bigg Boss Tamil Season 2 | Vijay TV | 20th July, 2018 | Episode 34 | Day 33 : checking who is fake in bigg boss house


நேற்றைய நாள் முடிவு இன்றய நாளின் தொடக்கமாக தொடங்குகிறது. பாலாஜி மற்றும் மஹத் தொடர்ந்து டேனியல் ஐ பற்றி பேசுகின்றனர். டேனியல் தனது பின் புறம் சைகை வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்வதாக சொல்கிறார். அவர்களுடன் ரித்விகா, ஷாரிக் மற்றும் சென்ட்ராயன் இணைந்து கொள்கின்றனர்.

அது மட்டும் இல்லாமல் நேற்று வந்த குழந்தைகள் மீதி வைத்த பாயசத்தை ரித்விகா, சென்ட்ராயன், ஷாரிக் மற்றும் மஹத் இவர்களை தவிர வேறு ஒருவரும் மனப்பூர்வமாக சாப்பிடவில்லை என்றும் பால்ஜி கூறினார். அந்த நேரத்தில் டேனியல் உள்ளே வர மஹத் உம நேரடியா கேட்டுவிட்டார். இது டானியேலை பிகவும் பாதித்துவிட்டது.

மஹத் வழக்கம் போல் பெண்கள் அறைக்கு சென்று யாஸிக்கா மற்றும் ஐஸ்வர்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சென்ட்ராயன் "நான் எப்பொழுது உன்னை பற்றி புறம் பேசினேன்" என்று கேட்கிறார்.

அடுத்த sengment ஆக house mates அனைவரும் தங்களுக்கு பிடித்த 5 நபர்கர்களுடன் selfiee எடுத்து கொண்டு அதில் யார் பிகவும் நெருக்கமானவர்கள் என்பதை camera முன்பு வந்து சொல்லவேண்டும்.
இதில்,
(மஹத், ஷாரிக்), (ஷாரிக், மஹத்), (ஐஸ்வரியா, யாஸிக்கா), (யாஸிக்கா, ஐஸ்வரியா), (ஜனனி, பொன்னம்பலம்), (பொன்னம்பலம், ஜனனி), (பாலாஜி, நித்தியா), (சென்ட்ராயன், டேனியல் ), (டேனியல், சென்ட்ராயன்), (வைஷ்ணவி, மும்தாஜ் ), (மும்தாஜ், ஷாரிக்), (ரித்விகா, பொன்னம்பலம்)
தேர்ந்து எடுக்கின்றனர் மற்றும் தேர்ந்து எடுத்த நபர்களை பற்றி கொஞ்சம் பேச வேண்டும்.

அடுத்த படியாக luxury பட்ஜெட் க்கு பதிப்பேன் கொடுக்க பட்டுள்ளது. பொத்தமாக 2600 புள்ளிகள் கொடுக்க படுகிறது. ஆனால் டாஸ்க் ஐ சரியாக செய்யாமல் இருந்ததற்கும், 3 நபர்கள் தூங்கியதற்கும் புள்ளிகள் 1800 க்கு குறைக்க படுகிறது.

luxury பட்ஜெட் பொருட்களை வாங்குவதில் டேனியல், வைஷ்ணவி மற்றும் ரம்யா குளறு படி செய்து எதோ தேர்ந்து எடுத்து முடிக்கின்றனர். இது முடிந்ததும் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் வெளில வந்து மும்தாஜ் பற்றி பேசுகின்றனர், அதாவது அவர்கள் இங்கே வந்து ஸ்டார் வாழ்கை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அதைக்கான பொருட்டாக்களை மட்டும் வாங்கி கொள்கிறார்கள் என்றும் பேசுகிறார்.

Task "நிமிர்ந்து நில் துணிந்து சொல்"

அடுத்த படியாக டாஸ்க் "நிமிர்ந்து நில் துணிந்து சொல்", இந்த டாஸ்க் இல், இந்த வாரத்தில் nominate ஆகியிருக்கும் 5 நபர்களிடம் டேனியல் 3 கேள்வி கேட்பார் மற்றும் nominate ஆகாத மற்ற house mates அனைவரும் 3 கேள்விகள் கேட்க வேண்டும். இதில் யார் உண்மையாக பதில் சொன்ன ஒருவருக்கு பிக் பாஸ் சூப்பர் பவர் கொடுப்பதாகவும், போலியாக பதில் சொன்னவருக்கு சிறை தண்டனையும் கொடுக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார்.

அனைவரிடமும் கேட்ட பிறகு, பாலாஜி போலியான முறையில் பதில் சொன்னதாகவும், ஐஸ்வர்யா உண்மையை சொன்னதாகவும் டேனியல் அறிவிக்கிறார். இந்த முடிவில் ஜனனி, வைஷ்ணவி மற்றும் ரம்யாவிற்கு உடன்பாடு இல்லை.

ஏற்கனவே வீடு 2 குழுவாக பிரிந்து உள்ளதாகவும், இந்த முடிவு இதை உறுதி படுத்துவதாகவும் மஹத், யாஸிக்கா மற்றும் ஐஸ்வர்யா பேசி சிரித்து கொள்கின்றனர்.
அதே நேரத்தில் பாலாஜி , பொன்னம்பலம் மற்றும் ரித்விகா, தனிப்பட்ட முறையில் டேனியல் முடிவு எடுத்ததாகவும் பேசி கொள்கின்றனர். அதன் பிறகு பாலாஜி சிறையில் அடைக்க படுகிறார்.

இத்துடன் இன்றய எபிசொட் முடிகிறது.












Comments